முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டிகளை பாதுகாக்க வேண்டும்: டிராவிட்

வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கான்பெரா, டிச. 16 - ஒரு நாள் போட்டிகளைக் குறைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்ட னான ராகுல் டிராவிட் யோசனை தெரிவித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது. அங்கு அந்த அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள், 2 டி - 20 போட்டிகள் மற்றும் இல ங்கையுடன் இணைந்து முத்தரப்பு போட்டிகள் ஆகியவற்றில் விளை யாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 26 -ம் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. அத ற்கு முன்னதாக இந்தியா பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடுகின்றது. 

முதலாவது பயிற்சி ஆட்டம் கான்பெரா நகரில் நேற்று தொடங்கியது. 

இந்த ஆட்டம் இன்றுடன் முடிவடைகிறது. இதில் பங்கேற்க வந்த ரா குல் டிராவிட் நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது - ஐ.சி.சி. அர்த்தமற்ற வகையில் அதிக அளவில் ஒரு நாள் போட்டிகளை நிர்ணயித்து வருகிறது. 

1985 -ம் ஆண்டில் இருந்தே இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. இதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தகுந்த தருணம் வந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன். மக்களும் இதை அதிகம் ரசிக்கவில் லை. 

கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்தது. இங்கு 5  ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. ஆனால் இதை நே ரில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. மைதானங்கள் அனைத் தும் வெறிச்சோடிக் காணப்பட்டது. 

இந்தப் போட்டி விறுவிறுப்பு இல்லாமல் போனதற்கு அதற்கு முன்னர் இந்திய அணி அந்த நாட்டுக்கு சென்று 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இதுவும் இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் குறைந்ததற்கு ஒரு காரணமாகும்.

இது ஒரு நாள் போட்டிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். ஒரு வீர ரின் திறமையை டெஸ்ட் போட்டி மூலமே வெளிப்படுத்த முடியும். ஆகவே அந்த ஆட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இதையும் டெஸ்ட் போட்டிகளாக மாற்றவேண்டும். இதில் பகல் இரவு ஆட்டங்கள் நடைபெறும் போது, சில இடங் களில் பனியின் காரணமாக போதிய வெளிச்சம் கிடைப்பதில்லை. அதனால் பந்துகளை சரியாக கணிக்க முடியவில்லை. இது போன்ற மைதானங்களில் கண்ணுக்கு எளிதில் தெரியக் கூடிய சிவப்பு நிற பந்து களை பயன்படுத்தலாம். இவ்வாறு டிராவிட் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்