முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவி சுப்பிரமணியம் விசாரணை கைதியாக தொடர்வது சரியே

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச.17 - காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய அரசு தரப்பு சாட்சி ரவிசுப்பிரமணியத்தை நீதிமன்ற விசாரணை கைதியாக தொடர்வது சரியானது அல்ல. அவருக்கு பெயில் வழங்கவேண்டும் என்று தி.நகர் பகுதியை சேர்ந்த அவருடைய தாயார் 80 வயது கொண்ட ராஜலஷ்மி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய மகன் ரவிசுப்பிரமணியத்தை இந்த கொலை வழக்கில் விசாரணை கைதியாக இன்று வரை வைத்திருப்பது சரியில்லை. மீண்டும் பழையபடி அவன் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கஸ்டடி எடுத்து போலீஸ் மனுதாக்கல் செய்திருப்பது எப்படி சரியாகும். ஏற்கனவே இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 24 பேருக்கு பெயில் வழங்கியுள்ளது.​ அதேபோல் என்னுடைய மகனுக்கும் பெயில் வழங்கவேண்டும். என்னுடைய வயதான காலத்தில் என் மகனுடன் இருக்க விருப்பப்படுகிறேன். ஆகையால் என் மகனுக்கு உடல் நிலை சரியில்லை. விரைவில் என் மகனுக்கு பெயில் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை முடிந்து நீதிபதிகள் நாகப்பன் மற்றும் நீதிபதி சுதந்திரம் ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்ற டிவிசன் பென்சு நீதிபதி முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்த ரவிசுப்பிரமணியம் அரசு தரப்பு சாட்சியாக மாறி தனது வாக்குமூலத்தை தருகிறார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டு மன்னிப்பு வழங்கி நிபந்தனையின் பேரில் நீதிமன்ற விசாரணை கைதியாக தொடரவேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை என்று உத்தரவிடுகின்றனர்.

இந்த விசாரணை தற்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது சாட்சி ரவிசுப்பிரமணியம் தான் அரசு தரப்பு சாட்சியாக மாறுவதாக வாக்குமூலம் அளித்தது, போலீசார் நிர்பந்தத்தில் தான் என்று பல்டி அடித்து வாக்குமூலம் அளித்தார். அந்த சமயத்தில் போலீசார் தரப்பில் பல்டி அடித்த ரவிசுப்பிரமணத்தை சங்கரராமன் கொலை வழக்கின் ஆரம்பத்தில் ரவிசுப்பிரமணியத்தின் குற்ற வழக்கின் பதிவின்படி மீண்டும் விசாரணைக்கு எடுக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர்.

ஆனால் அவருடைய தாய் (ரவிசுப்பிரமணியத்தின்) மகனுக்கு உடல்நிலை சரியில்லையென்றும், வயதான தன்னுடன் தன் மகன் இருக்க விருப்பம் தெரிவித்தும், வழக்கின் முதலில் இருந்து விசாரிக்க கூடாது என்றும், இந்த கொலை வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட 24 பேருக்கு பெயில் வழங்கியதை போல் மகனுக்கும் வழங்க வேண்டும் என்றும், இன்றுவரை நீதிமன்ற காவலில் வைத்திருப்பது சரியல்ல என்றும், என் மகனும் ஜாமீன் பெறுவதற்கு தகுதியுள்ளவன்தான். ஆகையால் இன்னும் என் மகனை நீதிமன்ற விசாரணை கைதியாக வைத்திருப்பது குற்றவியல் சட்டத்திற்கு புரம்பானது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் 306-(4) (பி) குற்றவியல் சட்டத்தின்படி இந்த விசாரணை முடிவுக்கு வரும் வரை நீதிமன்ற காவலில்தான் இருக்கவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தபடியால். இது ஒன்றும் சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று சொல்லமுடியாது. இந்த உத்தரவு சட்டத்திற்கு உட்பட்டததுதான் என்று தீர்ப்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்