முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் அல்லிநகரம் சினிமா படப்பிடிப்பு

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

திருமங்கலம், டிச. 17 - திருமங்கலம் நகரில் நடைபெற்ற அல்லி நகரம் சினிமா படப்பிடிப்பினை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். எம்.ஜி.ஆர் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் குமரன் தயாரிக்கும் அல்லிநகரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருமங்கலம் சோமசுந்தரம் தெரு ஆதிகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த படத்தை சக்தி சரோஜ்குமார் இயக்குகிறார். ரதீஷ்வரதன் கதாநாயகனாகவும், தமிழ், லீமா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வத்தலக்குண்டு, கம்பம், தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்து தற்போது திருமங்கலத்தில் நடந்து வருகிறது. திருமங்கலத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் நடைபெற்ற இந்த படப்பிடிப்பை ஏராளமானோர் திரண்டு நின்று கண்டுகளித்தனர். வரும் பிப்ரவரி மாதம் அல்லிநகரம் திரைப்படம் திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குனர் சக்திசரோஜ்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony