முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,மார்ச்.- 13 -ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 52 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோபியான் மாவட்டத்தில் இருக்கும் லெஹந்த் ஹப்டிபோரா பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையொட்டி அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகில் பாதுகாப்பு படையினர் நெருங்கியபோது தீவிரவாதிகள் சுடத்தொடங்கினர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் சுட்டனர். 

இருதரப்பினருக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அவர்கள் இஸ்பாக் அகமத் சோபான், குர்ஷீத் அகமத் இத்தோ என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த திங்களன்று குல்கம் மாவட்டத்தில் போலீசார் மீது நடந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் போலீசாரிடம் ஏ.கே. 47 துப்பாக்கிகளை பிடுங்கி சென்றனர். அந்த துப்பாக்கிகளையும் பாதுகாப்பு படையினர் மீட்டனர். அதே மாவட்டத்தில் வேறு இடத்தில் நடந்த சண்டையில் மேலும் ஒரு தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago