முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார்

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 17 - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கருக் கு விரைவில் பாரத ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது. விளை யாட்டு வீரர்கள் இந்த விருதை பெறு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள து. இது பற்றிய விபரம் வருமாறு -  உலக சாதனையாளரான டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக் க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வந்த ன. ஆனால் பொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் தான் இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. விளையாட்டு வீரர்களுக்கு இந்த விருதை வழங்க சட்டத்தில் இடமில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற் போது இதற்கு ஏற்றவாறு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. 

இதற்கு முன்னதாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதிமுறைகளில் திருத் தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. 

விளையாட்டு வீரர்களையும் பாரத ரத்னா விருதுக்கான பரிந்துரை யில் சேர்க்க வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. 

மத்திய உள் துறை அமைச்சகம் விளையாட்டு வீரர்களையும் பாரத ரத் னா விருதில் சேர்க்க வேண்டும் என்று கோரி, பிரதமர் அலுவலகத்து க்கு பரிந்துரை செய்தது. இதை பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டது. 

விளையாட்டு அமைச்சகத்துக்காக, பாரத ரத்னா விருது வழங்கும் விதி முறையில் மாற்றம் செய்யப்பட்டது. விளையாட்டு வீரர்களும் இந்த விருது பெற தகுதி பெற்று உள்ளனர். 

இதனால் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெறுகிறார். இதே போல முன்னாள் பிரபல ஹாக்கி வீரரான தயான் சந்த் இந்த விருதை பெறுகி றார். கடந்த 1954 -ம் ஆண்டு முதல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 41 பேருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது. ரா ஜகோபாலாச்சாரிக்கு முதல் பாரத ரத்னா  அளிக்கப்பட்டு உள்ளது. இது வரை பாரத ரத்னா விருது பெற்றவர்களில் சில முக்கிய நபர்களைப் பார்ப்போம். 

ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, காமராஜர், அம்பேத்கர், அமர்தி யா சென், எம்.ஜி.ஆர்., சர்தார் வல்லபாய் படேல், ராஜீவ் காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன், அப்துல்கலாம், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றவர்களில் முக்கிய மானவர்கள். 

வெளிநாட்டைசேர்ந்த எல்லை காந்தியான கான் அப்துல் கபார் கான் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மண்டேலா, மற்றும் இந்திய குடியுரி மைபெற்ற அன்னை தெரசாஆகியோரும் பாரத ரத்னா விருது பெற்று உள்ளனர். 

கடைசியாக கடந்த 2008 -ம் ஆண்டு இந்துஸ்தான் இசைக் கலைஞர் பிஷ்மண் ஜோஷி பாரத ரத்நா விருது பெற்றார். விளையாட்டு வீரர் கள் பாரத ரத்னா விருது பெற மத்திய அரசின் விதியில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்