முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னிகுக்குக்கு சிலை வைக்க மஞ்சூர் அலிகான் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.18 - ​முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுக்குக்கு சிலை வைக்க வேண்டும் என்று நடிகர் மஞ்சூர் அலிகான் கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து நடிகர் மஞ்சூர் அலிகான் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் முல்லைப்பெரியாறு அணை கட்டிய என்ஜினியர் பென்னிகுக்குக்கு கேரள- தமிழக எல்லையில் சிலை வைக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகங்களில் சேர்க்க வேண்டும். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் முதல்வரின் செயல்பாடு பாராட்டுக்குரியது. சிறப்பாக செயல்படுகிறார். திரை உலகத்தினர் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இதுவரைக்கும் யாரும் வாய் திறக்கவில்லை. எல்லோரும் டம்மி பீஸ்சாக உள்ளனர். 

முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட புதிய அணையை கட்ட முயற்சித்தால் தமிழகத்தில் உள்ள மலையாளிகளை அடிப்பேன். கேரள நடிகர்களுக்கு உள்ள உணர்வு இங்கு உள்ள தமிழ் நடிகர்களுக்கு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony