முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு வரவேண்டிய வரி பாக்கி ரூ. 2 லட்சம் கோடி

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 18 - 90 சதவீத வருமான வரியை ஹசன் அலிகான் உள்பட 12 பேர்கள் தான் செலுத்த வேண்டி உள்ளது என்று மத்திய தலைமை கணக்கு அதிகாரி கூறினார். இது பற்றிய விபரம் வருமாறு - இந்தியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் வருமான வரி பாக்கி பற்றிய விபரங்களை மத்திய தலைமை கணக்கு அதிகாரி வெளியிட்டு உள்ளார். இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. வருமான வரி இலாகாவுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி பாக்கியில் 90 சதவீதம் 12 பெரும் செல்வந்தர்களின் கணக்கில் தான் உள்ளது என தெரிய வந்துள்ளது. வருமான வரி பாக்கி வைத்துள்ள செல்வந்தர்களி ன் பெயர் விபரம் வருமாறு - 

புனேயைச் சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலிகான் ரூ. 50, 345 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளார். பங்குச் சந்தை வர்த்த கர் காலம் சென்ற ஹர்சத் மேத்தா ரூ.15, 944 கோடி வருமான வரி பா க்கி வைத்துள்ளார். 

ஹசன் அலிகானின் கூட்டாளி பெயர் காசிநாத் தபூரியா. இவர் ரூ. 602 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளார். காசிநாத் தபூரியாவின் மனைவி சந்திரிகா தபூரியா ரூ.20,340 கோடி வருமான வரி பாக்கி வைத்து உள்ளார். 

ஏ.டி. நரோத்தம் ரூ.5,761 கோடியும், ஹிதன் பி. தலால் ரூ. 4,200 கோ டியும், ஜோதி ஹெச் மேத்தா ரூ.1,739 கோடியும், அஸ்வின் எஸ். மேத் தா ரூ. 1,595 கோடியும், பி.சி. தலால் ரூ. 1,536 கோடியும், எஸ். ராம சாமி ரூ. 1,125 கோடியும், உதய் எம். ஆச்சாரியா ரூ. 653 கோடியும் வருமான வரி பாக்கி வைத்துள்ளனர். 

இது பற்றி தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி மேலும் விளக்கம் அளித்தார். அரசாங்கத்திற்கு ரூ. 1.95 லட்சம் கோடி வரித்தொகை வந் து சேரவில்லை. வரிபாக்கி வைத்துள்ள நபர்களின் மரணம், தொழில் நிறுவனங்கள் திவாலாகுதல், மற்றும் நிறுவனத்தை மூடி விடுதல் போன்ற காரணங்களால் ரூ. 1. 56 லட்சம் கோடி வரி பாக்கியில் 84 சத வீதத்தை வசூலிக்க இயலாது என தலைமை கணக்கு அதிகா ரி கூறி னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்