முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி இலங்கை அணியை எளிதாக சுருட்டியது

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

செஞ்சுரியன், டிச. - 19  - இலங்கை அணிக்கு எதிராக செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 81 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெ ற்று உள்ளது.  இந்தப்போட்டியில் தெ.ஆ.அணி தரப்பில் டிவில்லியர்ஸ், கேப்டன் ஸ்மித், கீப்பர் பெளச்சர், ருடால்ப், பிரின்ஸ், காலிஸ் மற்றும் இம்ரா ன் தாஹிர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அணி பிரமாண்டமான ஸ்கோரை எட்ட உதவினர். பெளலிங்கின்போது, பிலாண்டர், ஸ்டெயின் ஆகியோர் அபாரமாக பந்துவீசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். மார்கெல் மற்றும் காலிஸ் ஆகியோர்  இவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். இலங்கை அணி கேப்டன் தில்ஷான் தலைமையில் தெ.ஆ.வில்சுற்றுப் பயணம் செய்து கேப்டன் கிரீம் ஸ்மித் தலைமையிலான அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டி செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க்கில் கடந்த 15 -ம் தேதி துவங்கி  மூன்று நாட்களில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன் னில் சுருண்டது. மேத்யூஸ் 38ரன்னும், சமரவீரா 36 ரன்னும், பரணவி தானா 32 ரன்னும், ஜெயவர்த்தனே 30 ரன்னும் எடுத்தனர். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய தெ.ஆ. அணி பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. அந்த அணி இறுதியில், 122 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 411 ரன்களை எடுத்தது. அந்த அணி சார்பில் இரண்டு வீரர்கள் அரை சதம் அடித்தனர். டிவில்லியர்ஸ் 99 ரன்களை அடித்து  சதவாய்ப்பை கோட்டை விட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் 135 பந்தில் 99 ரன் எடுத் தார். இதில் 12 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பெரீரா வீசிய பந்தில் மாற்று வீரர் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியே றினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பெளச்சர் 101 பந்தில் 65 ரன்னையும், கேப்டன் ஸ்மித் 105 பந்தில் 61 ரன்னையும், ருடால்ப் 140 பந்தில் 44 ரன்னையும், பிரின்ஸ் 39 ரன்னையும், காலிஸ் 31 ரன்னையும், இம்ரான் தாகிர் 29 ரன்னையும் எடுத்தனர். பின்பு 2 வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் போலவே ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 39.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 81 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தெ. ஆ. அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பிலாண்டர் அபாரமாக பந்து வீசி, 5 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்டெயின் 2 விக்கெட் எடுத்தார். மார்கெல் மற்றும் இம்ரான் தாஹிர் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இலங்கை அணி தரப்பில், சமரவீரா ஒருவர் மட்டும் கால் சதத்தை தா  ண்டினார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். சமர வீரா 32 ரன்னையும், ஹெராத் 23 ரன்னையும், பெரீரா 21 ரன்னையும் எடுத்தனர்.  இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பிலாண்டர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்