முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. அழைப்புக்காக காத்துக் கிடக்கும் காங்கிரஸ்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, மார்ச் - 15 - தி.மு.க. அழைப்புக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது. இதனால் மீண்டும் கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பா.ம.க.வுக்கு 30 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. முதலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்க முடியாது, கேட்பது முறைதானா? என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். அதோடு தி.மு.க. உயர்மட்டக்குழு  கூட்டத்தை கூட்டி காங்கிரஸ் அரசில் இருந்து மத்திய அமைச்சர்கள் விலகுவதாக அறிவித்தார்.
ஆனால் தி.மு.க. அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று சோனியாவிடம் கெஞ்சி கூட்டணியில் நீடிக்க விரும்புவதாகவும், கேட்கிற 63 தொகுதிகளை தரவும் தயாராக இருக்கிறோம் என மு.க.அழகிரியும், தயாநிதி மாறனும் கூறினார்கள். சென்னை வந்த தி.மு.க. குழுவினர் காங்கிரஸ் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு 63 தொகுதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். ஆனால் காங்கிரஸ் கேட்கிற 63 தொகுதிகள் குறித்து இரு தரப்பிலும் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மறுபக்கம் தயாளு அம்மாள், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை நடந்தது.
இதனால் தி.மு.க.வினர் மத்தியில் எரிச்சலும், வெறுப்பும் ஏற்பட்டது. கடந்த வெள்ளிக் கிழமை காலை காங்கிரஸ் ஐவர் குழு தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படாததால் சென்று விட்டனர். காங்கிரஸ் தரப்பில் கடந்த முறை ஒதுக்கிய 48 தொகுதிகளுடன் புதிதாக 15 தொகுதிகள் கேட்கின்ற போது பா.ம.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வெற்றி வாய்ப்புள்ள இடத்தை குறி வைத்து காங்கிரஸ் கேட்டு வருகிறது. பா.ம.க. வெற்றி பெற்ற சீட்களை தர முடியாது என்று கருணாநிதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் தொகுதி ஒதுக்குவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி  பவனில்  பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று ஐவர் குழு காத்துக்கிடக்க, தி.மு.க. குழுவோ கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் கடுப்பான ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறி விட்டனர். நேற்றும் காத்திருந்து காத்திருந்து காங்கிரசுக்கு கண்கள் பூத்துவிட்டது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்ந்து   இழுபறியாக உள்ளது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான  ராகுல்காந்தி இளைஞர் காங்கிரசுக்கு 15 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று கூறிவிட்டார்.
மீண்டும்  தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீடு பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இரு தரப்பிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் 2 கட்சி தொண்டர்களிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த வேறுபாடு தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி கேட்கும்  தொகுதிகளை தி.மு.க.   ஒதுக்கவில்லை என்றால் இவ்விரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி மீண்டும் முறியுமா? என்று அரசியல் வட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago