முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி நிதான ஆட்டம் டெளபீக் உமர் சதம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

மிர்பூர், டிச. - 20  - வங்கதேச அணிக்கு எதிராக மிர்பூரில் நடைபெற்று வரும் 2-வது கிரிக் கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3-வது நாளன்று முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்னை எடுத்து உள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில் துவக்க வீரர் டெளபீ க் உமர் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, அசார் அலி மற்றும் யூனிஸ்கான் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தில் கடந்த 17 -ம் தேதி துவங்கியது.  முன்னதாக பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணி சிறப்பாக ஆடியது. அந்த அணி இறுதியில், 107.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்னை எடுத்தது. வங்கதேச அணி சார்பில், ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் சதம் அடி த்தார். அவர் 242 பந்தில் 144 ரன் எடுத்தார். இதில் 15 பவுண்டரி அடக்க ம். இறுதியில் அவர் டெளபீக் உமர் எறிந்த பந்தில் ரன் அவுட்டானார்.
மற்றொரு முன்னணி வீரரான சக்ரியார் நபீஸ் 3 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவவிட்டார். அவர் 117 பந்தில் 97 ரன்னை எடுத்தார். தவிர, கீப்பர் முஸ்பிகர் ரகீம் 102 பந்தில் 40 ரன்னையும், ஷக்டாட் ஹொசைன் 21 ரன்னையும் எடுத்தனர்.  பாகிஸ்தான் அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான உமர் குல் 102 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அய்ஜாஸ் சீமா 73 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். தவிர, சயீத் அஜ் மல் 2 விக்கெட் எடுத்தார்.
பின்பு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3 - வது நாள் ஆட்டநேர முடி வில், முதல் இன்னிங்சில் 96 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 292 ரன் னை எடுத்து இருந்தது. அப்போது, யூனிஸ்கான் 118 பந்தில் 48 ரன்னு டனும், மிஸ்பா உல் ஹக் 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.  பாகிஸ்தான் அணியின் இன்னிங்சில் துவக்க வீரர் டெளபீக் உமர் சதம் அடித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அவர் 256 பந்தில் 130 ரன் எடுத்தார். இதில் 16 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் நஜ்மல் ஹொசைன் வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார்.  அசார் அலி 147 பந்தில் 57 ரன்னை எடுத்து பெவிலியன் திரும்பினார். அவர் 7 பவுண்டரி அடித்தார். இறுதியில் அவர் ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான தமீம் இக் பால் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
வங்கதேச அணி சார்பில், நஜ்மல் ஹொசைன் 51 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஷாகிப் அல் ஹசன் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டி மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago