முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் அணி 470 ரன் குவிப்பு வங்கதேச அணி திணறல்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மிர்பூர், டிச. - 21 - வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடைபெற்று வரும் 2 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 470 ரன்னைக் குவித்துள்ளது. இந்த ப் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்சில் துவக்க வீரர் டெளபீக் உம ர் சதம் அடித்தார். கேப்டன் மிஸ்பா உல் ஹக் 70 ரன் எடுத்தார். தவிர, 2 வீரர்கள் அரை சதம் அடித்தனர். இதனால் அந்த அணி 400 ரன்னைத் தாண்டி பிரமாண்டமான ஸ்கோரை எட்டியது. ஆனால் இந்தப் போட்டியில் மோசமான வானிலை மற்றும் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 4- வது நாள் வரை முதல் இன்னிங்சை ஆடியது. இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும்.வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மிர்பூரில் உள்ள ஷெரே பங்க்ளா தேசிய அரங்கத்தி ல் கடந்த 4 நாட்களாக (17 -ம் தேதி முதல்) நடந்து வருகிறது. முன்னதாக இதில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்சி ல் 107.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில், ஷாகிப் அல் ஹசன் 144 ரன்னும், சக்ரியார் நபீஸ் 97 ரன்னும் முஸ்பிகர் ரகீம் 40 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான உம ர் குல் 102 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அய்சாஜ் சீமா 73 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, சுழற் பந்து வீரர் சயீ த் அஜ்மல் 2 விக்கெட் எடுத்தார். பின்பு முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 154.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 470 ரன்னைக் குவித்தது. டெளபீக் உமர் 130 ரன்னும், மிஸ்பா 70 ரன்னும், அசார் அலி 57 ரன்னும், அட்னன் அக்மல் 53 ரன்னும், யூனிஸ்கான் 49 ரன்னும், ஆசாத் சபீக் 42 ரன்னு ம் எடுத்தனர். வங்கதேச அணி சார்பில், ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 82 ரன் னைக் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். தவிர, நஜ்மல் ஹொசைன் 2 விக்கெட்டும், ரபியுல் இஸ்லாம் மற்றும் எலியாஸ் சன்னி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின்பு 2 -வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி 4- வது நாள் ஆட்ட நேர முடிவில் 35 ஓவரில் 5 விக்கெட் இழப்பற்கு 114 ரன்னை எடுத்து   ள்ளது. தற்போது 18 ரன் பின்னடைவில் உள்ளது. 

வங்கதேச அணி தரப்பில், நசீர் ஹொசைன் 30 ரன்னுடனும், கீப்பர் முஸ்பிகர் ரகீம் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமீம் இக்பால் 21 ரன்னும், மக்மதுல்லா 32 ரன்னும்  எடுத்தனர். உமர் குல், சீமா 2 விக்கெட்டும் எடுத்தனர். 

இன்று ஆட்டத்தின் கடைசி நாளாகும். வங்கதேச அணி தரப்பில் இன் னும் 5 விக்கெட்டுகளே உள்ளன. எனவே இந்த டெஸ்ட் போட்டி தற் போது பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்