முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. - 21 - சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திரபாபு, மாவட்ட நீnullதிபதிகள் தேவதாஸ், கருப்பையா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக இருந்த நீnullதிபதி எஸ். விமலா ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு nullநீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.   புதிய நீnullதிபதிகளின் பதவி ஏற்பு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டிட அரங்கில் நடந்தது. புதிய nullநீதிபதிகளுக்கு தலைமை nullநீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய nullநீதிபதிகள் ஏற்புரை நிகழ்த்தினார்கள். இந்த அளவுக்கு உயர்வு பெற உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீnullதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.  பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற nullநீதிபதிகள், புதிய nullநீதிபதிகளின் குடும்பத்தினர்கள், உறவினர்கள், அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அட்வகேட் ஜெனரல் நவnullதகிருஷ்ணன் புதிய நீnullதிபதிகளை வரவேற்று விளக்கி பேசினார்.   சென்னை நீதிமன்ற, மதுரை நீதிமன்ற கிளையையும் சேர்த்து மொத்த nullநீதிபதி பணியிடம் 60. தற்போது 4 புதிய nullநீதிபதி நியமனத்தையும் சேர்த்து nullநீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 7 நீnullதிபதி பணியிடம் காலியாக உள்ளது. புதிய நீதிபதிகள் பற்றிய விபரம்: நீnullதிபதி கே.ரவிச்சந்திரபாபு: விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 1958-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த கிராமத்திலும், பட்டப் படிப்பை சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்து, 1984-ம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்தார். மூத்த வழக்கறிஞர் காந்தியிடம் ஜூனியராக பணியாற்றினார். மத்திய அரசின் மூத்த வழக்கறிஞராக பதவி வகித்தார். உயர்நீதிமன்றத்தில் ரிட், சிவில், சுங்கத் துறை, கல்வித் துறைகளில் பயிற்சிகளை மேற்கொண்டார். இவரது தந்தை கந்தசாமி, ஒரு கல்வியாளர். காந்தியக் கொள்கையின்படி நடந்தவர். nullநீதிபதி பி.தேவதாஸ்: விருதுநகர் மாவட்டம், நத்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். 1955-ம் ஆண்டு மே 15-ம் தேதி பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு, சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம், முதுகலை சட்டப் படிப்புகளை முடித்தார். முதுகலை சட்டப் படிப்பில் பல்கலையில் முதல் இடம் பிடித்தார். திருவாரூரில், மாவட்ட முன்சிப் ஆக 1986-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 1992-ம் ஆண்டு சப்​ஜட்ஜ், 1998-ம் ஆண்டு மாவட்ட நீnullதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உயர்நீதிமன்ற நீnullதிபதியாக நியமிப்பதற்கு முன் சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் nullநீதிபதியாக பணியாற்றினார்.

nullநீதிபதி ஆர்.கருப்பையா: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவைச் சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி பிறந்தார். சிவகங்கையில் பட்டப் படிப்பு, மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்தார். 1981-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். 1986ம் ஆண்டு கடலூரில், முதன்மை மாவட்ட முன்சிப் ஆக நியமிக்கப்பட்டார். உயர்நீதிமன்ற நீnullதிபதியாக நியமிப்பதற்கு முன் சிறு வழக்குகள் நீதிமன்ற முதன்மை nullநீதிபதியாக பணியாற்றினார். இவரது தந்தை டி.ராமன், சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

நீnullதிபதி எஸ்.விமலா: கடலூர் மாவட்டம், வீராணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1957-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார். பரங்கிப்பேட்டையில் பள்ளிப் படிப்பு, திருச்சியில் பட்டப் படிப்பு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு முடித்தார். 1983-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். கோவையில் மாவட்ட நீnullதிபதியாக பயிற்சி பெற்றார். திருச்சியில் மாவட்ட கூடுதல் nullநீதிபதியாக பதவியேற்றார். சென்னை மகளிர் நீதிமன்றத்தின் முதல் நீnullதிபதியாக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு நீnullதித்துறை பயிற்சி கழகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அகில இந்திய அளவில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் nullநீதிபதி இவர் தான். உயர்நீதிமன்ற nullநீதிபதியாக நியமிப்பதற்கு முன் உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக பணியாற்றினார். 

 

க்ச்ச்சி டூச்சிடீ

சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர். பதவி ஏற்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் உடன் இருந்தபோது எடுத்தபடம். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்