முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசை கண்டித்து திருமங்கலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், டிச.- 21 - முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் கேரள அரசை கண்டித்து திருமங்கலம் நகரில் நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பினை உதாசீனப்படுத்திவிட்டு  முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் கேரள அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் நலச்சங்கங்கள் இணைந்து நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவர் சின்னச்சாமி, லோடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவர் விருமன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பஸ்நிலையத்திலிருந்து பேரணியாக நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுடன் சென்ற ஓட்டுனர்கள் திருமங்கலம் தேவர் திடலில் ஒன்று கூடி கேரள அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனிடையே இன்று திருமங்கலம் நகரில் அனைத்து வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்