முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளத்துக்குள் தமிழக லாரிகள் இன்று இயக்கப்பட மாட்டாது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

நாமக்கல், டிச. - 21 - தமிழக அரசியல் கட்சிகள் நடத்தும் கேரள மாநிலத்தை பொருளாதார ரீதியில் முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று புதன் கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அம்மாநிலத்துக்குள் தமிழக லாரிகளை இயக்குவதில்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழகம், கேரள மாநிலங்களுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த மாநில எல்லைகளிலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கேரள அரசை கண்டிக்கும் வகையில் இன்று கேரள மாநிலம் செல்லும் சாலைகளில் வாகனங்களை மறித்து பொருளாதார ரீதியாக முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. அறிவித்துள்ளது.  இப்போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்போது தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து சம்மேளன தலைவர் நல்லதம்பி நிருபர்களிடம் கூறுகையில், கேரள மாநிலத்தை பொருளாதார ரீதியில் முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், லாரிகளின் பாதுகாப்பை கருதியும் இன்று புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளத்துக்கு தமிழக லாரிகள் இயக்கப்பட மாட்டாது.
கேரளத்துக்கு செல்லும் 6 வழித்தடங்களிலும் எக்காரணம் கொண்டும் லாரிகளை அவற்றின் உரிமையாளர்கள் இயக்க வேண்டாம் என்றார். லாரிகள் இயக்கப்படாத பட்சத்தில் அம்மாநில மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படுவர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்