முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை கொண்டு வரப்படும்- ஜெயலலிதா

புதன்கிழமை, 21 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,டிச,- 22 - தமிழகத்தில் புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கையை தமிழக அரசு கொண்டு வரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கத்தில் ``கனெக்ட் 2011'' தொழில் அமைப்பின் சார்பில் ``புதிய கண்டு பிடிப்புகளை நோக்கி வளர்ந்து வரும் தொழில் முனைவோர் - தமிழகம் தலைமை தாங்குகிறது'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த கனெக்ட் தொழில் தொழில் அமைப்பின் முதலாவது ஆண்டுக் கூட்டம் 2001-ல் நடந்த போது அதை நான் தொடங்கி வைத்தேன். அதேபோல 2002-ம் ஆண்டும், பின்னர் 2005-ம் ஆண்டுக் கட்டத்திலும் நான் பங்கேற்றேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பூரிப்படைகிறேன். இது போன்ற கருத்தரங்குகள் மூலம் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை முன்னேறி வளர்ச்சியடைய உதவும். கருத்தரங்கிற்கான இது போன்ற தலைப்பைத் தேர்ந்து எடுத்ததில் விழா அமைப்பாளர்களை நான் பாராட்டுகிறேன். தொழில் நுட்பத் புரட்சி சில நேரங்களில் எதிர்பாராத வாய்ப்புகளை உருவாக்கும். அதுபோல இந்தியா போன்ற வளர்ந்து வவும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். மேலும் தகவல் தொழில் நுட்பத்துறை புரட்சியானது. மென்பொருள் மேம்பாட்டையும் தொடர்ந்து வளர்க்கும்.இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியானது ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது. இந்த வளர்ச்சியானது, தேசிய நீதியான வரலாற்றுப் பின்தங்கிய நிலைகளையும், கடந்தகால காலனிய தாக்கத்தையும் மாற்றுகிறது. இந்தியா இன்று தகவல் தொழில் நுட்பத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு இந்த துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆசியா- பசுபிக் பிராந்தியத்தில் தகவல் தொழில் நுட்பச் சந்தையில் இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும்  நாடாக இருப்பதாக ஐ.டி.சி. ஆய்வு கூறுகிறது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்கு தகவல் தொழில் நுட்பத்துறையானது மிகவும் வெளிச்சம் அளிக்கும் துறையாக மாறியுள்ளது. இந்தியாவிற்குள் தமிழகம் இத்துறையில் முன்னேற்றகரமான, முக்கியமான பங்கை வகிக்கிறது. அதுவும் குறிப்பாக சென்னையானது ஐ.டி. நகரமாகவே மாறியுள்ளது. சென்னையை முன்பு காபி விரும்பும் நகரம் என்று கூறுவது உண்டு. இப்போது அதன் புகழ் ஐ.டி.நகரம் என்று மாறிவிட்டது. நவீன தொழிலத்திற்கு ஏற்றார்போல் தமிழகம் மனித வளத்திற்குரிய உயரிய இடமாக உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 1 லட்சத்து 92 ஆயிரம் பொறியியாளர்கள் உருவாகின்றனர். இதே அளவுக்கு பயிற்சி பொறுபவர்களும் உள்ளனர். மேலும் 500 பொறியியல் கல்லூரிகள் உட்பட பல்கலைக் கழககங்கள் கொண்ட கட்டமைப்பு வசதிகளும் இங்கு உள்ளன.
உலக பொறியியலாளர்களில் 10 சதவிகிதமும் இந்திய பொறியியலாளர்களில் 25 சதத்தையும் அண்ணா பல்கலைக் கழகம் உருவாக்குகிறது. இத்தகைய மனித வளத்தினால், இந்த துறை சமீப ஆண்டுகளில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கி உள்ளது. மேலும் மென்பொருள் ஏற்றுமதியிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் ஐ.டி. ஏற்றுமதியானது 49 சதவிகிதமாகும். இதில் பி.பி.ஓ. மட்டும் 12 சதமாகும். தமிழகமும் சென்னையும் ஐ.டி. மூலதனம் குவியும் இடமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 1800 மென்பொருள் மற்றும் ஐ.டி. ஏற்றுமதியாளர்களும் உள்ளனர். இதில் 210 முழுமையான அன்னிய முதலீட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் அடங்கும். இத்தகைய சூழலில்  இந்த துறையானது தமிழகத்தின் முன்னோடி துறையாகவும், அனைவரையும் ஈர்க்கும் துறையாகவும் மாறி உள்ளது. இதனால் எனது அரசானது பல்வேறு அம்சங்களுடன் ஐ.டி. கொள்கையைக் கொண்டுவர உள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே தமிழகம் ஐ.டி. துறையில் முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து இருக்க உதவும். முதலீட்டாளர் நட்பு தொழில் துறை கொள்கை வடிவமாக இந்த புதிய கொள்கை திகழும். இதன் மூலம் ஆரோக்கியமான உற்பத்திக்கான சூழலை உருவாக்க முடியும்.
ஐ.டி. துறையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள், திறன்கள் உள்ள தமிழகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்றும் அழைக்கிறேன். இத்தகைய வலுவான முதலீட்டுத்திறனுடைய தொழில் துறையின் மூலம் இந்தியாவில் புதிய வளர்ச்சி அளிக்கும் மாதிரி மாநிலமாக தமிழகம் மாற முடியும். இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்