முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் ரயில் தடம்புரண்டதில் போக்குவரத்து கடும் பாதிப்பு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,டிச.- 22 - மும்பை நகரில் நேற்றுக்காலையில் மக்கள் பணிக்கு சென்றுகொண்டியிருக்கும் நேரத்தில் உள்ளூர் ரயில் ஒன்று தடம்புரண்டதில் போக்குவரத்து பாதித்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். கல்யாண் நிலையத்திற்கு சென்றுகொண்டியிருந்த ஒரு ரயிலானது, மத்திய ரயில்வேயின் புறநகர் பகுதியில் மஜீத் ரயில் நிலையத்திற்கு அருகே நேற்றுக்காலையில் தடம்புரண்டது. மும்பையின் மத்திய பகுதியில் உள்ள சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் இருந்து கல்யாண் ரயில் நிலையத்திற்கு லோக்கல் ரயில் பயணிகளுடன் சென்றபோது தடம்புரண்டது. ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிவிட்டன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளுக்கு ஊழியர்கள் சென்று கொண்டியிருந்தபோதும் மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்கு சென்றுகொண்டியிருந்தபோதும் இந்த விபத்து ஏற்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்வதில் ஈடுபட்டனர். ஆனால் இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்