முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக விளைச்சலை விளைவிக்கும் விவசாயிக்கு 5 லட்சமும் பதக்கமும் பரிசு-ஜெயலலிதா

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 22 - திருந்திய நெல் சாகுபடி முறையில் மாநிலத்திலேயே ஒரு ஏக்கரில் குறைந்தப்பட்சம் 2500 கிலோ நெல்லாவது அல்லது அதிகபட்சமாக உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு போட்டி நடத்தப்பட்டு அதில் பரிசு பெரும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சமும், ரூ.3500 பெருமானமான பதக்கமும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால், வேளாண் உற்பத்தியைப் பெருக்க,  பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்.  தற்பொழுது நவீன தொழில்  நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே, உணவு  உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும்.  இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும்   விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக 5 லட்சம்  ரூபாயும், 3,500 ரூபாய் மதிப்புடைய பதக்கமும், குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இப்பரிசு தமிழக முதல்வரால் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும்.   ஒரு ஏக்கருக்கு, குறைந்த பட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, nullநீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையினால், விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்