முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள எல்லை நோக்கி சென்ற வைகோ கம்பத்தில் கைதானார்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சின்னமனூர், டிச. - 22 - கேரள அரசின் போக்கை கண்டித்து ம.தி.மு.க சார்பில் நேற்று கேரளாவுக்கு செல்லும் பாதைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் கைது செய்யப்பட்டார்.  ம.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மாநிலத்திற்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் புதன் கிழமை நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். அதன்படி நேற்று போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலை லோயர்கேம்ப் பகுதியில் நேற்று காலை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாஸ் ஆகியோரும், கம்பம் மெட்டு பகுதியில் மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், பெரியார்தாசன், நாகை திருவள்ளுவன், போடி மெட்டு பகுதியில் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ. முருகன்ஜி ஆகியோரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தேனி நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். மேலும் வைகோவை முன்கூட்டியே தடுக்கவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து நேற்று காலை கம்பம் வந்து சேர்ந்தார் வைகோ. அங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்