முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரிபாக்கியை வசூலிக்கும் அதிகாரிகளுக்கு என்.ஆர்.காங். மிரட்டல்-அன்பழகன்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி, டிச.- 22 - புதுவை மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றைக்கூட இதுவரை செயல்படுத்தவில்லை. மக்களுக்கு நிதிநிலை பற்றி உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியட வேண்டும் என்று அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.400 கோடிக்கு மேல் உள்ள வரிபாக்கியை வசூலித்தால் இங்கு நிலவும் நிதி நெருக்கடியை தவிர்க்க முடியும். இதனால் வரிபாக்கி வசூலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுகிறார்கள் என்றும் சுட்டி காட்டினார். கடுமையான நிதி தட்டுப்பாடு காரணமாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்க, ஆரம்பித்த பணிகள், இனிமேல் ஆரம்பிக்கப்பட வேண்டியவை ஆரம்பிக்கப்படாமலேயே உள்ளது. அரசு அது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முறைகேடான வழிகளிலேயே செயல்பட்டு வருகிறது. கடந்த 7 மாதத்தில் புதிதாக ஒருவருக்கு கூட முதியோர்,விதவை உதவித்தொகை வழங்கப்படவில்லை. வீடு கட்டிக்கொள்ள ஒருவருக்கு கூட புதிதாக மானியம் வழங்கப்படவில்லை. இதற்கெல்லாம் நிதி தட்டுப்பாடு காரணம் என்று கூறும் அருச அதை சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டக்குழுவில் ரூ.2750 கோடிஇ பெற்று ர.600 கோடி கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. இது போன்ற திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டும் என்ற இந்த அரசுக்கு அக்கறை இல்லை. மாநில அரசுக்கு மின்துறை, கலால்துறை விற்பனை வரி போன்றவற்றில் ரூ.400 கோசி வரிபாக்கி உள்ளது. இதனை வசூல் செய்ய முயற்சி எடுக்கவில்லை. வரிபாக்கியை வசூலிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுகின்றனர்.
ஓரிரு நாட்களுக்கு முன் அமைச்சரவை கூட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணிவரை நடத்தப்படுகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 8 மணிநேரம் கூட்டம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
வெளியே அறிவிப்பதற்கு முதல்வர் ஏன் பயப்பட வேண்டும்? அமைச்சரவை கூட்டத்தில் மதுபார்களுக்கு ஏலமுறை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதை வராமல் தடுப்பதாக கூறி ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் வியாபாரிகளிடம் பண வசூலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எடுக்கப்பட்ட முடிவுகள் வெளிப்படையாக செய்தியாக வெளியாகி இருந்தால் முறைகேடுகளில் ஈடுபடுவோரை தடுத்திருக்க முடியும். சில்லறை மதுக்கடைகளை ஏலத்தில் விட்டால் புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் வருமானம் கிட்டும். தமிழர் பிரச்சனை, முல்லை பெரியாறு நிதிநீர் விவகாரத்தில் சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது. ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை.
நிதி தட்டுப்பாடு காரணமாக அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதை விவாதிக்க சட்டமன்ற கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அம்மா அவர்கள் சசிகலா கும்பலை நீக்கியது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன என்று நிருபர் கேட்ட கேள்விக்கு,
மாநில செயலாளர் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புரட்சித்தலைவி கட்சி நலனுக்கு எந்த முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகவே இருக்கும். கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் அம்மாவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago