முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் ரயிலை மறித்து போராட்டம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,டிச.- 22 - கேரள அரசை கண்டித்து மதுரையில் வக்கீல்கள் நேற்று ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து கொண்டு சென்றனர்.    முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அராஜக நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கேரள அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம், மறியல், கடையடைப்பு என போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் மிகுந்த ஆக்ரோசத்துடன் இந்த பிரச்சினையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆர்ப்பாட்டம், ஊர்வலம, மறியல் பல்வேறு கட்டங்களாக போராடிவரும் அவர்கள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று காலை மாவட்ட நீதிமன்றத்தில் ஊர்வலமாக வந்த அவர்கள் நேராக மதுரை ரயில்நிலையம் வந்தனர். காலை 11.35 வந்த சென்னை -குருவாயூர் எக்ஸ்பிரசை மறித்தனர். தண்டவாளத்தில் அமர்ந்து கேரள அரசுக்கு எதிராககோஷங்களை எழுப்பினர்.    மறியலில் ஈடுபட்டவர்களை ரயில்வே போலீசாரும், மதுரை நகர போலீசாரும் அப்புறப்படுத்தி கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கைதானார்கள். வக்கீல்களின் ரயில் மறியல் போராட்டத்தால் நேற்று மதுரை ரயில் நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்