முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்.,க்கு எதிரான டெஸ்ட்: ஜாஹிர்கான் தகுதி பெறுவாரா?

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 23 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்த வாரம் மெல்போர்னில் துவங்க இருக்கும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் முழு உடற்த குதி பெறுவாரா? என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையிலான அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 26 -ம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்குகிறது. 

இந்திய அணியின் முன்னணி வீரரான ஜாஹிர்கான் கணுக்காலில் ஏற் பட்ட காயத்திற்காக சிகிட்சை எடுத்துக் கொண்டார். இதனால் அவர் கடந்த 4 மாத காலமாக மறுவாழ்வு சிகிட்சையை மேற்கொண்டார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருக்கிறார். இருந்த போதிலம், அவர் மெல் போர்ன் டெஸ்டில் முழு உடற்தகுதியுடன் ஆடுவாரா என்பது சந்தேக கத்திற்கு இடமாகி உள்ளது. 

முதல் டெஸ்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலிய சேர்மன் லெவன் அணிக்கு எதிராக இந்திய சேர்மன் லெவன் அணி 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடி யது. இந்த இரண்டு ஆட்டமும் போதிய நேரமின்மையால் டிராவில் முடிந்தது. 

கான் பெராவில் இரண்டாவது பயிற்சி ஆட்டம் நடந்தது. இதில் ஜா ஹிர்கான் 15 ஓவர்களை வீசினார். ஆனால் அவரது பந்து வீச்சில் வழக் கமான வேகத்தை காண முடியவில்லை. பந்து வீச்சும் சீறற்றதாக இருந்தது. அவரால் நினைத்த மாதிரி பந்து வீச முடியவில்லை. 

டெஸ்ட் போட்டியில் வேகப் பந்து வீச்சாளர்கள் ஒரு நாளைக்கு 40 ஓவர்களை வீசியாக வேண்டும். எனவே ஜாஹிர்கான் 40 ஓவர்கள் வரை தாக்குப்பிடிப்பாரா? இதுவரை அவர் முழு உடற்தகுதி பெறாத வரை போல காணப்படுகிறார். 

இதற்கிடையே இரு அணிகளும் வளைப் பயிற்சியில் ஈடுபட்டன. இதி ல் ஆஸி. வேகப் பந்து வீச்சாளரான பட்டின்சன் வீசிய பந்தில் பாண்டி ங்கின் விரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் ஜாஹிர்கான் பந்தில் எந்த ஒரு இந்திய வீரரும் காயமடையவில்லை. 

இது குறித்து ஜாஹிர்கானிடம் கேட்ட போது, நான் 4 மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறேன். இந்தத் தொடருக்காக நான் நன்றாக ஆயத்தமாகி வந்திருக்கிறேன். எனது உடற்தகுதி நன்றாக உள்ளது என்றார் அவர். 

இந்தப் பிரச்சினை குறித்து அஸ்வினிடம் கேட்ட போது, ஜாஹிரும், இஷாந்த் சர்மவும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். டெஸ்ட் தொடரி ல் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago