முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 ஆயிரம் கி. மீட்டர் தூரம் சென்று தாக்கும் அணு ஏவுகணை சோதனை-ரஷ்யா

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

மாஸ்கோ,டிச.- 25 - சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளின் இலக்கை குறி தவறாமல் தாக்கும் பல்முனை அணு ஏவுகணைகளை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. அணு ஆயுத போட்டியில் இன்னும் அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளும் பழைய அணு ஏவுகளை விற்பனை செய்தோ அல்லது அழித்தோ விடுகின்றன. அதற்கு பதிலாக புதிய நவீன தொழில்நுட்பத்துடன் சக்திவாய்ந்த அணு ஏவுகணை தயாரித்து சோதித்து வருகின்றன. முன்னாள் சோவியத் யூனியன் இருந்தபோது தயாரிக்கப்பட்ட அணு ஏவுகணைகளை அழித்துவிட வேண்டும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அதனையொட்டி அந்த பழைய ஏவுகணைகளை ரஷ்யா அழித்து வருகிறது. அதற்கு பதிலாக புலவா என்ற ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்து சோதித்து வருகிறது. இந்த புதிய வகை ஏவுகணைகளுக்கு புலவா என்று பெயர் இந்த ரக ஏவகணைகளை கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து தயாரித்து சோதித்து வருகிறது. இதுவரை 18 புலவா ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. இதில் 11 அணு ஏவுகணைகள் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த 2 அணு ஏவுகணைகளும் அடங்கும். இந்த வகை ஏவுகணையானது பலமுனைகளை கொண்டது. இவைகள் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று வெவ்வேறு இலக்குகளை தாக்க வல்லது. இந்த வகையான ஏவுகணைகளை ரஷ்யாவின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒயிர் கடலில் இருந்து கப்பலில் வைத்து ஏவப்பட்டது. இந்த இரண்டு ஏவுகணைகளும் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று பசிபிக் கடலில் உள்ள கம்சத்கா தீபகற்ப பகுதியில் உள்ள இலக்குகளை குறிதவறாமல் தாக்கியது என்று ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்