முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு மறுதேர்தல்-கோர்பசேவ்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, டிச. - 26 - ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் என்று சோவியத் யூனியன் முன்னாள் தலைவர் கோர்பசேவ் வலியுறுத்தி உள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே மீண்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சோவியத் யூனியனின் முன்னாள் அதிபரும், ரஷ்ய சுதந்திர ஜனநாயக கட்சி தலைவருமான கோர்பசேவ் இது தொடர்பாக கூறுகையில், ரஷ்யா இப்போது வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் முறைகேடாக தேர்தலில் வென்று எவ்வாறு ஆட்சி நடத்த முடியும். பொய்களின் மேல் உங்கள் எதிர்காலத்தை அமைத்து கொள்ள முடியாது. எனவே ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலை மீன்டும் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மறுதேர்தலை வலியுறுத்தி மாஸ்கோவில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ரஷ்யாவின் பல இடங்களில் இது போன்ற பேரணிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் புதினுக்கு எதிராகவே நடத்தப்படும் போராட்டமாக கருதப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்