முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில் இரு பிரிவினர் மோதல் 3 எம்.எல்.ஏக்கள் உட்பட 300 பேர் கைது

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நாகர்கோவில், டிச - 26 - குமரி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடைய ஏற்பட்ட மோதலில் 3 எம்.எல்.ஏக்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் குலசேகரம் கான்வென்ட்டில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அது போல இந்தாண்டும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக திருவட்டாறு கல்லடி மாமூடு என்ற இடத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று குலசேகரம் கான்வென்டு சந்திப்பில் பேரணி நிறைவு பெற்று கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவும் விழாவில் இடம்பெறும். பின்னர் சிறப்பு ஆராதனையுடன் விழா நிறைவுபெறும். இந்த ஆணடு அதுபோல பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 88 வது பிறந்தநாளையொட்டி பா.ஜ.கவினர். செருப்பாலூர் அம்மன் கோவில் முன்பிருந்து குலசேகரம் சந்திப்பு வரை பேரணி நடத்த திட்டமிட்டிருந்தனர். இருதரப்பினரும் பேரணி நடத்த முயற்சித்ததால் காவல்துறையினர் இருதரப்பினருக்கும் அனுமதி மறுத்து விட்டனர். இந்தநிலையில் வழக்கம் போல் பேரணி நடத்த கிறஸ்தவ ஐக்கிய பேரவையினர் மாலை 3.30 மணிக்கு திருவட்டாறு கல்லடி மாமூடில் கூடினர். ஏற்கனவே  பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் இந்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்கு குளச்சல் சட்டமன்ற உறுப்பினரும், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பிரின்ஸ், கிள்ளியூர் எம்.எல்.ஏ ஜான்ஜேக்கப், பத்மநாபபுரம் திமுக எம்.எல்.ஏ புஷ்பலீலா ஆல்பன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் குமாரதாஸ், மற்றும் பி.சி.எம்.திலக்குமார் ஆகியோர் அங்கு கூடினர். பேரணி புறப்பட தயாரானதும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 3 எம்.எல்.ஏக்கள், 16 பெண்கள் உட்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனையறிந்த பாஜகவினர் குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் உள்ளிட்டோர் செருபாலூர் அம்மன் கோவில் முன்பு கூடினர். பின்னர் பாஜகவினர் அங்கிருந்த அனைவருக்கும் பாயாசம், இனிப்பு வழங்கி கலைந்து சென்றனர்.

 

புட்நோட் 

 

1.கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்தபடம்.

 

2. பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis