முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிட்சர்லாந்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.27 - திட்டமிட்டப்படி சுவிட்சர்லாந்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வேன் என்று நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூறினார்கள். நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் பின்னணி பாடகர் கிரீஷ் ஆகியோருக்கு வருகிற 1-ந்தேதி சுவிட்சர்லாந்தில் பாராட்டு விழா நடக்கிறது. இலங்கை அரசினை கண்டித்து நிகழ்ச்சியை ரத்து செய்து உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேறிய துணிச்சலை பாராட்டி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகர் ஜீவாவும் கலந்து கொள்வதாக இருந்தது. இலங்கையை சேர்ந்த தொழில் அதிபர் நடத்துவதால் இதில் ஜீவா பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து நடிகை சங்கீதாவும் அவரது கணவர் கிரீஷ்யும் நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் நாங்கள் திட்டமிட்டப்படி கலந்து கொள்கிறோம். இந்த நிகழ்ச்சி கடந்த வருடம் கூட நடந்தது. அதுப்போல் தான் இந்த நிகழ்ச்சி இந்த வருடமும் நடக்கிறது. யாரோ வேண்டுமென்று திட்டமிட்டு இப்படிபரப்பி வருகிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஈழத்தமிழர்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு நிகழ்ச்சியை நடத்துபவர் ரஞ்சன் என்பவர்தான். அவர் முழு விபரமும் எங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டார். யாரையும் நாங்கள் எதிர்த்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நாங்கள் கலைஞர்கள் எங்களுக்கு  அரசியல் தெரியாது. சுவிட்சர்லாந்தில் நாங்கள் கலந்து கொள்ளும்  நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு இருக்கும்  பயம் இல்லை. திட்டப்படி நாங்கள் கலந்து கொள்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony