முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமான போக்குவரத்து தொழிலில் பெரும் நஷ்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.27 - நடப்பாண்டில் இந்திய விமான போக்குவரத்து தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடும் போட்டி நிலவுவதும் ஒரு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு விமான கம்பெனிகளிடையே போட்டி மனப்பான்மை, எரிபொருள் விலை உயர்வு ஆகியவைகளின் காரணமாக விமான போக்குவரத்து கம்பெனிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் மத்திய அரசின் உதவியை இந்த விமான கம்பெனகள் எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய விமான போக்குவரத்துதுறைக்கு முழு நேர அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விமான போக்குவரத்து துறையை மத்திய அமைச்சர் வயலார் ரவி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத் சிங், விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு ஆண்டில் 3 முறை பெரிய அளவில் ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது. இந்த மூன்று விபத்துக்களும் வடகிழக்கு மாநிலங்களில்தான் நடந்துள்ளது. இதில் ஒரு விபத்தில் அருணாசலப்பிரதேச மாநில முதல்வர் தோர்ஜி காண்டு பலியானார். விமானிகளும் போலி தஸ்தாவேஜூகள் கொடுத்து லைசென்ஸ்கள் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையொட்டி 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விமான போக்குவரத்துதுறையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் ஏர் இந்திய கம்பெனி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். கம்பெனிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி பல காரணங்களால் கடந்த 2009-10-ம் ஆண்டில் ரூ. 7 ஆயிரத்து 38 கோடியாக இருந்த இழப்பு 2010-11-ம் ஆண்டில் இழப்பு ரூ.15 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்