முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனாமி நினைவு நாள்: அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - சுனாமி பேரழிவு 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினார். கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டதால் இந்தியா, இலங்கை, இந்தோனிஷியா உள்பட சில நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் இறந்து போனார்கள். சுனாமி பேரழிவின் 7-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. சென்னை ராயபுரம் தொகுதி காசிமேடு கடற்கரையில் அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் டி.ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமான மக்களுடன் பேரணியாக கடலுக்கு சென்று சுனாமியால் இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் புரசை கிருஷ்ணன், ராயபுரம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், 5 வது மண்டல குழு தலைவருமான இரா.பழனி, வட்ட செயலாளர்கள் பிரபுராம், சிவா மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis