முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 333 ரன்னில் ஆல் அவுட்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், டிச. 28 - இந்திய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வரும் முத லாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 333 ரன்னை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் துவக்க வீரர் கோவன் மற்றும் பாண்டிங் இருவரும் நன்கு ஆடி அரை சதம் அடித்தனர். சிட்லே, வார் னர் மற்றும் ஹாடின் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடி அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். 

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜாஹிர்கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியில் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டைக் கைப்பற்றினார். தவிர உமேஷ் யாதவ் மற்றும் சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் உள்ள கிரிக்கெ ட் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

இதில் முதலில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நா ள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில், 89 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு, 277 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது, ஹாடின் 21 ரன் னுடனும், சிட்லே 34 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

2 -வது நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த அந்த அணி மேலும் 55 ரன்னைச் சேர்த்து ஆட்டம் இழந்தது. அந்த அணி இறுதியில், 110 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 333 ரன்னை எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், துவக்க வீரர் எட்கோவன் அதிகபட்சமா க, 177 பந்தில் 68 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறு தியில் அவர் அஸ்வின் வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொ டுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 94 பந்தில் 62 ரன்னை எடுத்தார். இதி ல் 6 பவுண்டரி அடக்கம். தவிர, சிட்லே 99 பந்தில் 41 ரன்னையும், வா ர்னர் 49 பந்தில் 37 ரன்னையும், கேப்டன் கிளார்க் 31 ரன்னையும், ஹா டின் 27 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணியின் முன்னணி வீரரான ஜாஹிர்கான் 77 ரன்னைக் கொ டுத்து 4 விக்கெட் சாய்த்தார். தவிர, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 -வது நாள் ஆட்ட நே ர முடிவில் முதல் இன்னிங்சில் 65 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது டிராவிட் 185 பந்தில் 68 ரன்னு டனும், இஷாந்த் சர்மா பூஜ்யத்திலும் இருந்தனர். 

இந்திய அணி தரப்பில், டெண்டுல்கர், சேவாக் மற்றும் டிராவிட் ஆகி ய 3 வீரர்களும் அரை சதம் அடித்தனர். சேவாக் அதிரடியாக ஆடி 83 பந்தில் 67 ரன்னை எடுத்த நிலையில் பட்டின்சன் பந்தில் கிளீன் போல் டானார். அவர் 7 பவுண்டரி அடித்தார். 

100 - வது சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டெண்டுல்கர் இந்தப் போட்டியிலும் ஏமாற்றினார். நன்றாக ஆடிக் கொண்டு இருந்த அவர் 98 பந்தில் 73 ரன்னை எடுத்த நிலையில் அவுட்டானார். இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். 

டிராவிட் 185 பந்தில் 68 ரன்னை எடுத்து இருந்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். முன்னதாக காம்பீர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். சேவாக், மற்றும் டிராவிட் ஜோடி 2- வது விக்கெட்டிற்கு 75 ரன் சேர்த்தது. டெ ண்டுல்கர் மற்றும் டிராவிட் ஜோடி 3- வது விக்கெட்டிற்கு 117 ரன் சேர் த்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago