முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதியார் நினைவு இல்லத்தில் அமைச்சர் ஆய்வு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை நேற்று (27.12.2011) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் தற்போது நடைபெற்று வரும், நடைபெறவுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

செய்தித் துறை அமைச்சர், பாரதியார் இல்லத்தின் முதல் தளத்திற்கு செல்லும் வழியில் கைப்பிடிகள் அமைக்கவும், டைல்ஸ் பதிக்கவும் உத்தரவிட்டார்.  அங்குள்ள கூட்ட அரங்கை பார்வையிட்டு அதை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க உத்தரவிட்டார்.  பின்னர் நூலகத்திற்கு சென்ற அமைச்சர் அங்கு 31 ஆயிரம் நூல்கள் பராமரிக்கப்படுவதை பார்வையிட்ட பின்னர் அவர் தெரிவித்ததாவது:-​

திராவிட இயக்க வரலாற்றை நினைவு கூறும் வகையில் பேரறிஞர் அண்ணா,  எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரைகள், சாதனைகள் பற்றிய புத்தகங்களை பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் தனியே ஒரு அலமாரியை ஒதுக்கி இதுபோன்ற புத்தகங்கள் இடம்பெற செய்ய உத்தரவிட்டார்.  புத்தகங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும், பல அரிய உரைகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இந்த நூலகத்தில் பாரதியார் மற்றும் பல்வேறு தலைவர்களின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன என்றும், அவை எவ்வித சேதாரமுமின்றி பாதுகாக்கப்பட வேண்டுமென்றும்,  மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் சிறிய பழுதுகள் ஏற்பட்டால் கூட அதை உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் அந்த குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சருடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், துணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தாணப்பா, சக்தி கோதண்டம், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் சங்கரலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சேகர், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்