முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பனில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம், டிச.28 - வங்கக் கடலில் புயல் உருவாகி இருப்பதால் பாம்பன் துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க மீன்துறையினர் தடை விதித்துள்ளனர். சென்னையில் இருந்து தென் கிழக்கு திசையில் வங்கக் கடலில் ஆயிரம் கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகி இருப்பதாலும், இது தமிழகத்தின் கடலூர் - ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே வரும் 30 ம் தேதி கரையை கடக்கவுள்ளது. இதனால் வட தமிழகத்தில் பலத்த மழை பெய்யக் கூடும் என பாம்பன் வானிலை எச்சரித்துள்ளது. 

இதனை தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கூண்டு மூலம் கடலில் காற்றுடன் பலத்த மழை பெய்ய கூடும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் சிரமம் ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்த மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்தனர். மேலும் ராமேஸ்வரம், மண்டபம், மீன்துறை அலுவலக பலகையில் வங்க கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யக் கூடும் என்றும் இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து வடக்கு கடலில் மீன்பிடிக்க செல்லும் விசை படகு மீனவர்களுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்