உ.பியில் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சீதாப்பூர், டிச. 28 - உத்தர பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி மாதத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே இரண்டு கட்டங்களாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் சித்தவுளி தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். காங்கிரசுக்கு வாய்ப்பளித்தால் சாதாரண மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். அடுத்த 5 ஆண்டுகளில் உ.பியை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம். இங்கு ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி மக்களை பற்றி கவலைப்படவில்லை. அக்கட்சியின் தலைவர் எந்த கிராமத்திற்கும் சென்றதில்லை. அதனால் அவர் வறுமையையும் மக்கள் பிரச்சினைகளையும் அறியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: