முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் மசோதா நிச்சயம் நிறைவேறும்: பிரதமர்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.28 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிச்சயம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா வேண்டும் என்று கோரி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே 3 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கியுள்ள நிலையில் இந்த மசோதாவில் முக்கியமான சில அம்சங்கள் இடம்பெற வில்லை என்று கூறி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த 22-ம் தேதி பாராளுமன்றத்தில் மிக முக்கியமான இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவில் சில திருத்தங்களை  செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மசோதாவின் இப்போதைய வடிவத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த மசோதாவில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று மற்ற எதிர்க்கட்சிகள் விரும்பினால் அந்த கட்சிகளின் கருத்துக்களை பொதுவான காரணங்களின் அடிப்படையில் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும் என்றும் பா.ஜ.க . கூறியுள்ளது.

இந்த மசோதா மிகவும் பலவீனமான மசோதா என்று ராஜ்ய சபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் எஸ்.எஸ். அலுவாலியா கூறியுள்ளார்.

இந்த மசோதா குறித்து பல்வேறு விதமான  சர்ச்சைகள் நிலவிவரும் வேளையில் இந்த மசோதா நிச்சயம் நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த மசோதா நிறைவேறாது என்ற நம்பிக்கை இருந்திருந்தால் நாங்கள் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க மாட்டோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக பிரதமர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

லோக்சபையில் நேற்று இந்த மசோதாவை பிரதமர் அலுவலகத்திற்கான மத்திய அமைச்சர்  நாராயணசாமி துவக்கிவைத்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்