முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் தற்கொலை மிரட்டல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,டிச.28 - முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்ற மாடியில் ஏறி நேற்று வக்கீல்கள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.  முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து மதுரை வக்கீல்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. மதுரையில் உள்ள கேரள நிறுவனங்கள் மூட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மதுரை வக்கீல்கள் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் சகாயத்திடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று மதுரை வக்கீல்கள் பூசைதுரை, சேகர் ஆகிய இருவரும் மதுரையில் உள்ள கேரள நிறுவனங்களை மூட கலெக்டர் இதுவரை எந்தவிட நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனே எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கோர்ட்டு மேல் மாடியில் நின்று பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர்.இதனால் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே முதன்மை அமர்வு நீதிபதி தட்சிணாமூர்த்தி விரைந்து சென்று வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஆனாலும் அவர்கள் கலெக்டர் சகாயம் உடனடியாக இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினர்.  இது குறித்து தகவலறிந்த வருவாய் அதிகாரி முருகேஷ் விரைந்து வந்து வக்கீல்களுடன் சமரசபேச்சுவார்த்தை நடத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago