முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் சேவாக் 8 ஆயிரம் ரன்னைக் கடந்தார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், டிச. 28 - மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா  ன கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் அதிரடி வீரரான வீரேந்தர் சேவாக் டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்னைக் கடந்து சாதனை படைத்தார். இது பற்றி ய விபரம் வருமாறு - இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக். ஆஸ்திரே லியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் அவர் நேற்று 67 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் வீசிய பந்தில் கிளீன் போல்டானார். 

சேவாக் 20 ரன்னை எடுத்த போது, 8 ஆயிரம் ரன்னைத் தொட்டார். 93 -வது டெஸ்ட் மூலம் அவர் 8 ஆயிரம் ரன்னை அடித்துள்ளார். 22 சதமு ம், 31 அரை சதமும் இதில் அடக்கம். அதிகபட்ச ரன் 319 ஆகும்.  

டெஸ்ட் போட்டியில், 8 ஆயிரம் ரன்னைக் கடந்த 5 -வது இந்திய வீரர் ஆவார். உலக அளவில் 21-வது வீரர் ஆவார். சேவாக் சமீபத்தில், தா ன் ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னைத் தொட்டார். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி யில் அவர் 219 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்த போது தா ன் இந்த ரன்னைத் தொட்டார். 

டெஸ்ட் போட்டியில் 8 ஆயிரம் ரன்னுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்க ள் பெயர் விபரம் வருமாறு - டெண்டுல்கர் 15,185 ரன்னை எடுத்து முத ல் இடத்தில் இருக்கிறார். அவர் 189 டெஸ்டில் விளையாடி 51 சதத்தை அடித்து இருக்கிறார். 

டிராவிட் 13,319 ரன் (159 டெஸ்ட், 36 சதம்), எடுத்து 2 -வது இடத்திலு ம், கவாஸ்கர் 10,127 ரன் (125 டெஸ்ட், 34 சதம்) எடுத்து 3-வது இடத்தி லும், லக்ஷ்மண் 86,26 ரன் (131 டெஸ்ட், 17 சதம்) எடுத்து 4-வது இடத்தி லும், சேவாக் 8,047 ரன் (93 டெஸ்ட், 22 சதம் ) எடுத்து 5 -வது இடத்தி லும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்