முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசை கண்டித்து சேலத்தில் கடையடைப்பு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சேலம் டிச.29 - முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் பிடிவாதத்தை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று அனைத்து வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு உள்ள நிலையில் ரூ.14 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகளை உடனே துவங்க வேண்டும்.முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு புதிய அணைகட்டுவோம் என்ற பிடிவாதத்தை கண்டித்தும்,சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், வணிகர்களை பாதிக்கும் நடைமுறைக்கு வந்துள்ள மத்திய அரசின் தரக்கட்டுப்பாடு சட்டம் 2006 மற்றும் 2011 ஐ உடனே கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று.

அதன்படி சேலம் மாநகரில் உள்ள சின்னகடை வீதி,பெரியகடை வீதி, முதல் அஹ்ரகாரம், 2 வது அஹ்ரகாரம், அருணாச்சல ஆசாரி தெரு,லீ பஜார்,சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், 5 ரோடு உள்ளிட்டப்பகுதிகளிலும் மாவட்ட அளவில் ஆத்தூர்,மேட்டூர்,இடைப்பாடி,கொளத்தூர், ஆட்டையாம்பட்டி,வாழப்பாடி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள்,ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள்,மளிகைக் கடைகள், இரும்பு கடைகள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் என ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்த கடை அடைப்பால் சுமார் 30 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டிக்கும் என கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony