முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாயின் கனவை நனவாக்குவதே லட்சியம்: பிலாவல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், டிச. 29 - தனது தாய் பெனாசிர் பூட்டோவின் கனவை நனவாக்குவதே எனது முதல் லட்சியம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.  பெனாசிர் பூட்டோவின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, வளமான பாகிஸ்தானை உருவாக்குவதோடு, நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக ஒருபோதும் தாய் நாட்டை விட்டுத் தர முடியாது. மக்களுக்கு அளிக்கும் உத்தரவாதம்தான் தனது தாய்க்கு அளிக்கும் உறுதிமொழி என்று அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 வயதாகும் பிலாவல் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ராணுவத்தை பலவீனப்படுத்தி கடந்த 2007, டிசம்பர் 27 ம் தேதியில் பயங்கரவாதம் வெற்றி கொண்டது.  ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல் ஜனநாயக பாதையை மக்கள் தேர்வு செய்தனர். நாட்டில் வலுவான ராணுவமும், சுதந்திரமான நீதிமன்ற செயல்பாடும் அவசியம் என்பதை ஜனநாயக கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

பயங்கரவாதம் தவிர பல்வேறு பிரச்சினைகள் பாகிஸ்தானில் உள்ளன. நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதே போல் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சிறந்த கல்வி மூலம்தான் மேம்பாடு அடைய முடியும். இதைத்தான் எனது தாயார் பெனாசிரும் விரும்பினார். குறிப்பாக, பெண் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கையை பெனாசிர் எடுத்தார் என்று பிலாவல் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்