முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் கலாச்சார மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கல்பாக்கம், டிச.29 - வெளிநாட்டு பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் நாட்டிய விழா மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் அருகே நேற்றுமுன்தினம் மாலை 7 மணிக்கு தொடங்கியது.  தொடக்க விழாவிற்கு அமைச்சர் கோகுலஇந்திரா தலைமை தாங்கினார். அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, திருப்போரூர் எம்.எல்.ஏ. தண்டரை கே.மனோகரன் சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தோஷ் கே.மிஸ்ரா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் வி.கே.ஜெயக்கொடி (தலவர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்)  வரவேற்று பேசினார். அமைச்சர் சி.வி.சண்முகம் குத்துவிளக்கேற்றி நாட்டிய விழாவை தொடங்கி வைத்து பேசினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பயணிகள் கலந்து கொண்ட இவ் விழாவில் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பல சபாக்கள் மூலம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்கு நம் நாட்டில் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வந்து இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கின்றனர். எனவே, சென்னை இந்தியாவின் கலாசார தலைநகர் என்றழைக்கப்படுவது மிகவும் பொருத்தமாகும். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பல நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் ஒரு கலாசார மாநிலமாக உருவாகியுள்ளது.   கலைக்கல்வி நிறுவனங்களையும், கலை அமைப்புகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, கலை பண்பாட்டுத்துறை எனும் ஒரு தனித்துறையை 1991​ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்​அமைச்சராக ஜெயலலிதா முதன் முறையாக பொறுப்பேற்று உருவாக்கப்பட்டது.  முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் தொன்மை வாய்ந்த தமிழக கலைகளைப் போற்றி பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாமல்லபுரத்தில் நடை பெறும் நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நம் நாட்டின் பாரம்பரியமிக்க கலாசாரம் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சுற்றுலா முன் னேற்றத்தில் இந்திய நாட்டிய கலை நிகழ்ச்சிகள் இரு முக்கிய பங்கினை வகிக்கிறது. மாமல்லபுரத்திற்கு சிற்பக்கலைகளை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு, இந்த நாட்டிய கலை நிகழ்ச்சிகள் ஒரு கூடுதல் வரப்பிரசாதமாகும். இளைஞர்கள் அதிக அளவில் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அவர்களது திறமையை வெளிக்கொணர வேண்டும்.இவ்வாறு அமைச்சர் சி.வி. சண்முகம் பேசினார். விழாவில்  இயல், இசை, நாடக மன்ற தலைவர் தேவா, செயலாளர் நடிகை சச்சு, எம்.எல்.ஏக்கள் கணிதா சம்பத், கே.பி.கந்தன், மாமல்லபுரம் சிறப்பு நிலைஆ பேரூராட்சித்தலைவர் கோதண்டபாணி, இரா.பெருமாள், வி.எஸ்.ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) எஸ்.ஆர். சுதர்சன் நன்றி கூறினார்.

பின்னர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியாக லட்சுமி ராமசாமியின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இசை அமைப்பாளர் தேவாவின் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்