முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - கிருஷ்ணா

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 15 - பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் ஜப்பான் நாட்டிற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் - பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் ஜப்பானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜப்பானில் உள்ள இந்திய தூதருடன் நான் தொலைபேசியில் பேசினேன். ஜப்பானில் 25 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலானவர்கள் டோக்கியோவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும் இந்திய தூதர் தெரிவித்துள்ளார் என்றும் கிருஷ்ணா தெரிவித்தார்.

ஜப்பானில் உள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் அளிக்கும் என்றும் இது போன்ற உதவிக்காக தனி தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

டோக்கியோவை தவிர பிற பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள இந்தியர்களின் நிலை பற்றி கேட்டதற்கு அவர்கள் தாங்கள் பத்திரமாக இருப்பதாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். எனவே இந்தியர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்