முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசோலை மோசடி: இயக்குநர் சரணுக்கு பிடிவாரண்டு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.29 - காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் சரணுக்கு சென்னை ஜார்ஜ்டவுன் திமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர் மோகன் என்பவர் தொடுத்திருந்த வழக்கில் இந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  பாலகிருஷ்ணன் என்ற ஆடிட்டர் மூலமாக இயக்குநர் சரண் எனக்கு அறிமுகமானார். சில வழக்குகள் சம்பந்தமாக என்னுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக நான் வாதாடியுள்ளேன். இதற்காக அவர் எனக்கு ரூ.6 லட்சம் கட்டணம் தர வேண்டும். பலமுறை கேட்டும் அவர் தரவில்லை. இதற்காக அவர் கொடுத்த காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. எனவே அவர் மீது காசோலை மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஜார்ஜ் டவுன் 7 வது நீதிமன்ற நீதிபதி சாந்தினி விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சரணுக்கு உத்தரவிடப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்ததால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி சாந்தினி உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து இயக்குநர் சரண் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. இயக்குநர் சரண் வசூல்ராஜா எம்.பி., பி.எஸ்., ஜெமினி, அசல் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்