முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், டிச.30 - இந்திய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற முதலாவ து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 122 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிக்கி பாண்டிங், மைக் ஹஸ்சே, எட்கோவன், சிட்லே, வார்னர் , மற்றும் பட்டின்சன் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த னர். 

பின்பு பெளலிங்கின் போது, ஹில்பென்ஹாஸ், சிட்லே, பட்டின்சன் ஆகியோர் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். லியான் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினார். 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலா வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத் தில் கடந்த 26 -ம் தேதி துவங்கியது. 5 நாள் நடக்க வேண்டிய இந்தப் போட்டி 4-வது நாளன்றே முடிவுக்கு வந்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங் சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 333 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், எட்கோவன் 68 ரன்னையும், ரிக்கி பாண்டிங் 62 ரன் னையும், சிட்லே 41 ரன்னையும், வார்னர் 37 ரன்னையும், கிளார்க் 31 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 282 ரன்னை எடுத்தது. சேவாக் 67 ரன்னையும், டெண்டுல்கர் 73 ரன்னையும், டிராவிட் 68 ரன்னையும், அஸ்வின் 31 ரன்னையும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 76.3 ஓவரில் 240 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில், ஹஸ்சே 89 ரன்னையும், பாண்டிங் 60 ரன்னையும், பட்டின்சன் 37 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 292 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. ஆனால் அடுத் து களம் இறங்கிய அந்த அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 169 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 122 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. 

இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் 46 பந்தில் 32 ரன்னையும், அஸ்வி ன் 35 பந்தில் 30 ரன்னையும், தோனி 44  பந்தில் 23 ரன்னையும், யாதவ் 21 ரன்னையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், பட்டின்சன் அபாரமாக பந்து வீசி 53 ரன் னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். சிட்லே 42 ரன்னைக் கொடுத் து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஹில்பென்ஹாஸ் 2 விக்கெட்டும், லியான் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக பட்டின்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்