முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு விவகாரம்: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தேனி,டிச.30 - ஈழத்தமிழர், முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களில் மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் கூறினார். தேனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 5-வது மூன்று நாள் மாநாடு துவங்கியது. இதில் நேற்றுமுன்தினம் அரசியல் விளக்கப்பொதுக்கூட்டம் நடந்தது. 

மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ரவிமுருகன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் திருமலைக்கொழுந்து வரவேற்றார். மாநில குழுஉறுப்பினர் அழகிரிசாமி, மாவட்டச்செயலாளர் ஜீவா, மாநிலக்குழு உறுப்பினர் தங்கம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது; முல்லைப்பெரியாறு அணையானது தமிழர்களுக்காக பென்னிகுக்கால் கட்டப்பட்டது. அந்தக்காலப்பொறியியல் முறைப்படி கற்கலாலும், சுண்ணாம் பாலும் கட்டப்பட்ட இந்த அணை பலமாக உள்ளதாக உச்சநீதிமன்றம் அமைத்த பொறியாளர் வல்லுநர் குழு ஏற்கனவே தெரிவித்து விட்டது. தற்போது இந்த அணை நில அதிர்வு காரணமாக இடிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் கேரள அரசு தொடர்ந்து கூறிவருகிறது.  நில அதிர்வு ஏற்பட்டால் புதிதாகக் கட்டப்படும் அணை மட்டும் உடையாதா? முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு பொதுமக்கள் அச்சப்படும் வகையில் விஷம பிரசாரம் செய்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசு தவறிவருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அம்மாநில அரசு ஏற்றக்கொள்ளாத நிலையில் அதனை நிலை நிறுத்தவேண்டியது. உச்சநீதிமன்றத்தின் கடமை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் துரோகம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்