ஹசாரே உண்ணா விரதத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், டிச.29 - அன்னா ஹசாரே உண்ணாவிரதத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி சமூக சேவகர் அன்னா ஹசாரே மும்பையில் 3 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.  இவரது இந்த உண்ணாவிரதத்தை எதிர்த்து  கர்நாடக ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த பொது நலன் மனு மீது ஐகோர்ட்டு நீதிபதிகள் ராம் மோகன் ரெட்டி, வேணு கோபால் ராவ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. 

பிறகு இந்த பொது நலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதில் பொதுநலன் எதுவும் இல்லை என்றும் உண்ணாவிரதம் இருப்பதற்கு குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்றும்  நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த பொது நலன் மனுவை வக்கீல் அமர்நாத் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் சட்ட விரோதமானது என்றும்  அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: