முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் மருந்து கிடங்கில் வெடிவிபத்தில் 17 பேர் பலி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

யாங்கூன், டிச. 31 - தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் நாட்டில் மருந்து பொருள் வைத்திருந்த கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் பெரும் சத்தத்துடன் மருந்து பொருள் கிடங்கு வெடித்து சிதற தொடங்கியது. அப்போது கிடங்கு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. வெடி விபத்தில் அருகில் இருந்த வீடுகளும் பலத்த சேதமடைந்தன. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட சப்தத்தால் அக்கம் பக்கத்தில் உல்ள மக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 79பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு படையினர் தொடர்ந்து பல மணி நேரம் போராடி காலை 7 மணியளவில்தான் தீயை முழுமையாக அணைத்தனர். எனினும் இங்கு குண்டு ஏதும் வைக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருந்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதி பொருட்களால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்