ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்து கொலை

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      இந்தியா
rape

 

மெல்பர்ன் மார்ச், 15 - ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் மெடவ்பேங் கால்வாய் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்தது. இதை கட்டிட ஒருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் ஒரு பெண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சூட்கேசுக்குள் பிணமாக இருந்தது கல்லூரி மாணவி தோஷா தாக்கர் என்பது தெரியவந்தது. இவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். அவரை யாரோ கற்பழித்து கொலை செய்துவிட்டு சூட்கேசுக்குள் வைத்து கால்வாயில் போட்டு சென்று இருப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும்.

    கடந்த 9 ம் தேதி தோஷா  தாக்கரை அவரது நண்பர்கள் பார்த்து இருக்கிறார்கள். இதனால் அதன் பிறகு தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்திய மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக 19 வயது இளைஞர் டேனியல் ஸ்டானிரெசினால்டு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: