முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்: இலங்கை 208 ரன் வித்தியாசத்தில் வெற்றி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

டர்பன், டிச. 31 - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டர்பனில் நடைபெற்ற 2-வது கிரி க்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 208 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1 -1 என்ற கணக் கில் சமனாகியுள்ளது. 

இந்தப் போட்டியில் சமரவீரா, கேப்டன் தில்ஷான், கீப்பர் சண்டிமா ல், சங்கக்கரா ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக ஜெயவர்த்தனே மற்றும் மேத்யூஸ் ஆகியோர் ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, சுழற்பந்து வீச்சாளர் ஹெராத், வெலி 

கேடரா, மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். பெரீரா மற்றும் தில்ஷான் ஆகியோர் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். 

இலங்கை அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் பெறும் முதல் வெற்றி இதுவாகும். தவிர, தில்ஷான் தலைமையில் இலங்கை அணிக்கு கிடை

த்த முதல் வெற்றி இதுவாகும். 

கேப்டன் தில்ஷான் தலைமையிலான இலங்கை அணி தென் ஆப்பிரிக்

காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் கிரீம் ஸ்மித் தலை

மையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. 

இலங்கை முதல் இன்னிங்சில் 108.2 ஓவரில் அனைத்து விக்கெட்டை

யும் இழந்து 338 ரன் எடுத்தது. சமரவீரா 289 பந்தில் 102 ரன்னும், கீப்பர் சண்டிமால் 58 ரன்னும், கேப்டன் தில்ஷான் 47 ரன்னும், ஜெயவர்த்த

னே 31 ரன்னும், மேத்யூஸ் மற்றும் ஹெராத் 30 ரன்னும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 54.4 ஓவரில் 

அனைத்து விக்கெட்டையும் இழந்து 168 ரன்னில் சுருண்டது. அம்லா 54 ரன்னும், ஸ்டெயின் 29 ரன்னும், டிவில்லியர்ஸ் 25 ரன்னும் எடுத்தனர். 

இலங்கை அணி தரப்பில், வெலிகேடரா 52 ரன்னைக் கொடுத்து 5 விக்

கெட் எடுத்தார். ஹெராத் 49 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தா

ர். தவிர, பெரீரா 1 விக்கெட் எடுத்தார். 

அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 78.2 ஓவரில் அனை

த்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்னை எடுத்தது. சங்கக்கரா 190 பந்

தில் 108 ரன்னையும், சண்டிமால் 54 ரன்னையும், சமரவீரா 43 ரன்னையும், எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்கா அணி 2 -வது இன்னிங்சில் 450 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை இலங்கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி இலங்கை சுழலில் சிக்கி 241 ரன்னில் ஆட்டம் இழந்தது.

இதனால் இந்த 2 -வது டெஸ்டில் இலங்கை அணி 208 ரன் வித்தியாசத்

தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகல் கொண்ட இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகி உள்ளது. 

தெ. ஆ. தரப்பில், அம்லா 81 பந்தில் 51 ரன்னையும், டிவில்லியர்ஸ் 141 பந்தில் 69 ரன்னையும், ஸ்டெயின் 125 பந்தில் 43 ரன்னையும், ஸ்மித் 26 ரன்னையும், ருடால்ப் 22 ரன்னையும்  எடுத்தனர்.   

இலங்கை அணி சார்பில் ஹெராத் 79 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். பெர்னாண்டோ 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்

தார். தவிர, பெரீரா மற்றும் தில்ஷான் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹெராத் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago