முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை கட்டாயம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.31 - சிகரெட், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மீது உடல் நலம் குறித்த எச்சரிக்கை கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று மத்திய குடும்பநல அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புகையிலை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர் கவனத்திற்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிகரெட்கள் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகளுக்கான சிப்பம் கட்டுதல் மற்றும் முகப்புச்சீட்டு விதிகள் 2008ஐ அரசிதழில் வெளியிட்டதை தொடர்ந்து தற்போது அறிவிக்கை ஜி.எஸ்.ஆர் 417(இ) நாள் 27.05.2011 ன் படி புதிய விளக்க விவர நல எச்சரிக்கைகளை அனைத்து புகையிலைப் பொருட்களடங்கிய சிப்பங்களிலும் கட்டாயமாக காட்சிக்கு வைப்பதற்கு  செயல்படுத்திட மத்திய அரசு குறித்திருக்கிறது.

புகையிலை சிப்பங்களில் புகைக்கும்  வடிவிலானவைகளுக்கு புகையிலை சிப்பங்களில்  மெல்லும்/ புகைக்காத வடிவிலானவைகளுக்கு  விவர விளக்க உடல் நல எச்சரிக்கைகள் குறிப்பிட்ட பாங்கில் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு புகையிலை சிப்பங்களில் பொறிக்கப்பட வேண்டும் .

இது சிப்பத்தின் முன்புறத்தில் பார்வையில்படும் முக்கிய பகுதியில் குறைந்தபட்சம் 40 சதவிகித  இடம்பெற்றிருக்க வேண்டும்.

எச்சரிக்கை தகவல் சிப்பங்களின் மேற்புற மூலைக்கு இணையாக அமைந்திருக்க வேண்டும்.

பார்வையில்படும் முக்கிய பகுதியில்  இருப்பதைப்போல அதே திசையில் அமைந்திருக்க வேண்டும் . இந்த சட்டத்தை முனைப்புடன் செயல்படுத்திட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் குழுவினை அறிவித்துள்ளது.

இதையடுத்து உற்பத்தி செய்யும் வாளாகத்தில் நடக்கும் அனைத்து மீறல்கள் குறித்து மத்திய கலால் துறை ஆணையர்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகள் அமைந்துள்ள அந்தந்த உற்பத்தி அமைப்பு குறித்து முறையீடு செய்யப்பட வேண்டும்.  இந்த சட்ட ஷரத்துக்களை மீறும் புகையிலை உற்பத்தியாளர் அல்லது தயாரிப்பாளர்களுக்கு இரண்டு வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5000./ வரை nullடிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.

அதைப்போல விற்பனையாளர்களும் விநியோகஸ்தர்களும் ஒரு வருடம் வரை nullடிக்கலாகும் சிறை தண்டனை அல்லது ரூ1000 வரைடிக்கலாகும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை விதிப்புக்கு ஆளாவார்கள்.

இந்த சட்டத்தின்கீழ் வரும் புகையிலை தயாரிப்புகள் என்பதில் சிகரெட்கள், சிகார்கள், சுருட்கள், பீடிகள், சிகரெட் .புகையிலை, பைப் புகையிலை மற்றும் ஜுகா புகையிலை, மெல்லும் புகையிலை, மூக்குப்பொடி, பான்மசாலா அல்லது புகையிலை அதன் ஒரு பகுதியாக கலந்த மெல்லும் பொருள் (எந்தப் பெயரில் அது அழைக்கப்பட்டாலும்) குட்கா மற்றும் புகையிலை அடங்கிய பல்பொடி உள்ளடங்கும்.  

சிகரெட் அல்லது ஏதேனும் இதர புகையிலை பொருட்களின் தயாரிப்பு, விநியோகம், இறக்குமதி அல்லது சிகரெட் விநியோகம் செய்வதில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நபரும் சிகரெட் அல்லது இதர புகையிலை தயாரிப்பின் ஒவ்வொரு சிப்பங்களிலும் மேற்சொன்ன அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி எச்சரிக்கை படங்கள் குறிப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்