முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - வங்காளதேசம் அபார வெற்றி

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சிட்டகாங், மார்ச். 15 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்டகாங் நகரில் நடைபெ ற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை தோற்கடித்து இந்தத் தொடரில் முன்னிலை பெ ற்று உள்ளது. இந்தப் போட்டியில் வங்காளதேச அணி தரப்பில், இம்ருல் கெய்ஸ்,  ஜூனைட் சித்திக் மற்றும் சக்ரியார் நபீஸ் ஆகியோர் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, அப்துர் ரசாக் அபாரமாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன், ரூபெல் ஹொசைன் மற்றும் ஸ்ராவாடி சுவோ ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தில் சிட்ட காங் நகரில் உள்ள ஜாகுர் அகமது செளத்திரி அரங்கத்தில் 32 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிக ள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நெதர் லாந்து அணி வங்கதேச பந்து வீச்சை சமாளித்து ரன் எடுக்க முடியாம ல் திணறியது. இறுதியில் அந்த அணி 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்        டையும் இழந்து 160 ரன்னை எடுத்தது. 

நெதர்லாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டென் டஸ்சாட்டே அதிகபட்சமாக 71 பந்தில் 53 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழ க்காமல் இருந்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடித்தது குறிப் பிடத்தக்கது. 

வங்கதேச அணி சார்பில், அப்துர் ரசாக் 29 ரன்னைக் கொடுத்து 3 விக் கெட் எடுத்தார். தவிர, ஷாகிப் அல் ஹசன், ரூபெல் ஹொசைன் மற்று ம் சுக்ரவாடி சுவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

வங்கதேச அணி 161 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை நெதர்லாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 41.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்னை எடுத்தது. 

இதனால் வங்காளதேச அணி இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெ ற்றிப் புள்ளிகள் கிடைத்தது. 

வங்காளதேச அணி சார்பில், துவக்க வீரர் இம்ருல் கெய்ஸ் 113 பந்தில் 73 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இவர் நிலைத்து நின்று ஆடியதால் அந்த அணி வெற்றி பெற்றது. 

ஜூனைட் சித்திக் 53 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பொரென் வீசிய பந்தில் சீலாரிடம் கேட் ச் கொடுத்து வெளியேறினார். தவிர, சக்ரியார் நபீஸ் 60 பந்தில் 37 ரன் னை எடுத்தார். 

நெதர்லாந்து அணி சார்பில், கூப்பர் 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். தவிர, பொரென் மற்றும் முடாசர் புகாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகநாக இம்ருல் கெய்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்