முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

துபாய், ஜன. 1 - இந்திய சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மெர்க்கேட்டர் லிமிட்டெட் என்ற கப்பல் கம்பெனிக்கு சொந்தமான எம்.டி.பிரேம்திவ்யா என்ற எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றிச்செல்லும் சரக்கு கப்பலில் திடீர் என கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறை சரிசெய்யும் பணியில் அந்த கப்பலின் மாலுமிகளும், சிப்பந்திகளும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கப்பலில் திடீர் என ஒரு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் இரண்டுபேரை காணவில்லை. மேலும் சிலர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். 

105 பணியாளர்களையும், மாலுமிகளையும் கொண்ட இந்த கப்பலில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெடிவிபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வரவதாக அந்த கப்பலின் கேப்டன் மூசா மொராடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பலியான 3 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு, அந்த கப்பலிலேயே வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் அருகே உள்ள குஜைரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த கப்பலின் 24 மாலுமிகளும் அருகேயுள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கப்பலை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த கப்பலில் எண்ணையோ, இயற்கை எரிவாயுவோ எதுவும் இல்லை. அது வெறும் கப்பலாகத்தான் இருந்தது என்று கேப்டன் மூசா மொராடு தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்