முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சு நாட்டில் பிரபாகரன் தபால்தலை வெளியீடு

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

பிரான்சு, ஜன.1 - பிரான்சில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய நாடுகளான பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தபால் தலை வெளியிடப்பட்டன. தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலரான கார்த்திகைபூ, புலிக்கொடி மற்றும் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தை கொண்ட 4 வகையான தபால் தலை முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தபால் முத்திரைகளுக்கு பிரான்சு அஞ்சல் துறை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

இவற்றை பயன்படுத்தி தங்களது தபால்கள் மற்றும் சரக்குகளை தமிழர்கள் அனுப்ப முடியும் என்று தமிழர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரான்சு வாழ் சிங்களர் மக்கள் மற்றும் இலங்கை அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரான்சு தூதரகம் கூறுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் சின்னங்களை கொண்ட தபால் தலைகள் வெளியானது குறித்து எங்களுக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் பிரான்சு அஞ்சல் துறை ஸ்போஸ்ட் இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்