முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - நியூசிலாந்து கனடா அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மும்பை, மார்ச். 15 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 97 ரன் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில், துவக்க வீரர் பிரண்டன் மெக்குல்லம் சதம் அடித்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினார். கேப்ட 

ன் டெய்லர், ரைடர், ஸ்டைரிஸ், வில்லியம்சன் மற்றும் எல். மெக்குல்லம் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

பெளலிங்கின் போது, ஜேக்கப் ஓரம் மற்றும் மில்ஸ் இருவரும் அபாரமாக பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். செளதீ, ரைடர் மற்றும் எல். மெக்குல்லம் ஆகியோர் மேற்படி இருவருக்கும் ஆதரவாக பந்து வீசினர். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30 -வது ஆட்டம் மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் ஏ யைச் சேர்ந்த நியூசிலாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கனடா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி தரப்பில், குப்டில் மற்றும் பிரண்டன் மெக்குல்லம் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். நியூசிலாந்து அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெ ட்டை இழந்து 356 ரன்னைக் குவித்தது. அந்த அணி சார்பில், 1 வீரர் சதமும், 1 வீரர் அரை சதமும், 4 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

துவக்க வீரரான மெக்குல்லம் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 109 பந்தில் 101 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பைத்வான் வீசிய பந்தில் குணசேகராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக கேப்டன் டெய்லர் 44 பந்தில் 74 ரன்னைக் குவித்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். தவிர, ரைடர் 56 பந்தில் 38 ரன்னையும், வில்லியம்சன் 27 பந்தில் 34 ரன்னையும், ஸ்டைரிஸ் 20 பந்தில் 35 ரன்னையும், பிராங்ளின் 8 பந்தில் 31 ரன்னையும் எடுத்தனர். கனடா அணி தரப்பில், பைத்வான் 84 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். பாலாஜி ராவ் 62 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, டேவிசன் 30 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

கனடா அணி 359 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நியூசிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 261 ரன்னை எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி இந்த லீக்கில் 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்தத் தொடரில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

கனடா அணி தரப்பில், கேப்டன் பகாய் அதிகபட்சமாக, 87 பந்தில் 84 ரன்னை எடுத்தார். ஹன்ஸ்ரா 105 பந்தில் 70 ரன்னை எடுத்தார். தவிர, படேல் 35 பந்தில் 31 ரன்னையும், குர்ரம் சோகான் 16 பந்தில் 22 ரன்னையும், டேவிசன் 27 பந்தில் 15 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி தரப்பில், ஜேக்கப் ஓரம் 47 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மில்ஸ் 2 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, செளதீ,ரைடர் மற்றும் எல். மெக்குல்லம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பிர ண்டன் மெக்குல்லம் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்